இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சஞ்சாலி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால், உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த உத்தரப்பிரதேச பொலிசார் 10ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சாலியின் பெற்றோர், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.