30 ஆண்டுகளுக்கு பின் தாய்நாட்டுக்கு திரும்பிய நபர்! துடிதுடிக்க இறந்த பரிதாபம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் நீண்ட 30 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சொந்த கிராமத்துக்கு திரும்பிய நிலையில் விதி கொடூரமாக விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து சொந்தம் குடியிருப்புக்கு காரில் புறப்பட்ட நிலையில் சாலை விபத்தில் சிக்கி குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் சூரநாடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் பிள்ளை. இவர் விமான நிலையத்தில் இருந்து சொந்த குடியிருப்புக்கு திரும்பும் வழியே பேருந்துடன் மோதி இவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா பகுதியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சென்றிறங்கிய ராஜன் பிள்ளையை அவரது ஒரே மகன் அமல் வரவேற்றுள்ளார்.

மேலும், உறவினர் ஒருவருடன் மூவரும் காரில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர். அப்போது பேருந்து ஒன்றில் இவர்களது கார் பலமகா மோதியுள்ளது.

இந்த விபத்தில் ராஜன்பிள்ளை சம்பவயிடத்தில் கொல்லப்பட்டார். அவரது மகன் அமல் மற்றும் உறவினருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அமலின் நிலை கவலைக்கிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எஞ்சிய காலம் குடும்பத்துடன் செலவிட எண்ணி நாடு திரும்பிய நபர் சாலை விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.