ஆண் குழந்தைக்காக 38 வயது மனைவியை 10 முறை கர்ப்பமாக்கிய கணவன்!

மும்பையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது 10 வது பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.

38 வயதான பெண்மணிக்கு ஏற்கனவே 7 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகள் பிறந்து உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் கணவர் வீட்டார் ஆண் குழந்தையை எப்படியாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தியால் 10 வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில், பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பெண்ணின் உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்பதற்காக மனைவியை 10 முறை கர்ப்பமாக்கிய கணவனின் செயலால் அப்பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.