மெத்தையில் ஒளிந்து சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள்….

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவில் நுழைய முயன்ற இரு அகதிகளை பொலிஸார் சோதனையில் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

வடக்கு போலந்து, மொரோல்லா, மற்றும் மொரோக்கோ பகுதிகளுக்கு இடையே பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக எல்லையை கடந்து சென்ற வாகனத்தை மறித்து, மேலே இருந்த மெத்தைகளை கிழித்த போது இரண்டு நபர்கள் மறைந்திருப்பதை பொலிஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தில் இருப்பதால் மருத்துவ பரிசோதனை தேவையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் செனட்டரான ஜோன் இனாரிட்டூவின் இந்த வீடியோவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.