திடீரென தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபாசப்படம்!

ஈரான் தொலைக்காட்சியில் திடீரென ஆபாச பட காட்சி ஒளிபரப்பானதை அடுத்து இயக்குனரை பணிநீக்கம் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஈரான் நாட்டில் கடுமையான பல சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு தொலைக்காட்சிகளில் ஒரு ஆணும் பெண்ணும் கை குலுக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜாக்கிசான் நடித்த படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

அப்போது திடீரென திரைப்படத்தில் உள்ள ஒரு ஒழுக்கமற்ற காட்சி திரையில் ஓட ஆரம்பித்தது. இதனை வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக தொலைக்காட்சியின் இயக்குனரை பணிநீக்கம் செய்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேருந்து தாக்குதல் குறித்து இதுவரை எந்த அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் ஒரு படத்தில் கவனக்குறைவால் வெளியான காட்சிக்காக ஒருவரை பணிநீக்கம் செய்வதா என இணையதளவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளார்.