மேகன் எப்போது கிளம்புவார் என்று காத்திருந்து அவர் சென்றதும் அவருக்குப் பின்னாலேயே துப்பாக்கியுடன் புறப்பட்ட கேட் தனது கணவருடன் சென்று சேர்ந்து கொண்டார்.
கேட் துப்பாக்கியுடன் புறப்பட்டார் என்றதும், என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம்.
ராஜ குடும்பத்தினர் பறவை வேட்டைக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். அதில் இந்த வருடம் இளவரசர் ஹரி வேட்டைக்கு செல்வதற்கு மேகன் எதிர்ப்பு தெரிவித்தாக செய்திகள் வெளியாகின.
விலங்குகள் நல ஆர்வலரான மேகன் வேட்டையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்த செய்திகள் வெளியானது போலவே, அவருக்கும் இளவரசி கேட்டுக்கும் இடையே உரசல் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், Sandringhamஇல் விருந்து நிகழ்ச்சிகள் முடிந்து மேகன் கிளம்ப, அதற்காகவே காத்திருந்தாற்போல், கேட் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு கிளம்பிவிட்டார்.
கேட் வேட்டையில் சிறந்தவர் என்பதும், பல ஆண்டுகளுக்குப்பின் இப்போது மீண்டும் வேட்டைக்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அரண்மனையைச் சேர்ந்த ஒருவர், மேகன் ராஜ குடும்ப வழக்கங்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துப்போக தொடங்கியிருந்தாலும், ராஜ குடும்பத்தின் வேட்டையாடும் பழக்கம் மட்டும் அவருக்கு இன்னும் பிடிக்கவில்லை.
ராஜ குடும்பத்தினர் பல நூற்றாண்டுகளாக வேட்டையாடி வரும் நிலையில், அவர்களால் அந்த பழக்கத்தை விடமுடியாது என்பதை மேகன் நன்றாகவே அறிந்துள்ளார் என்று கூறும் அந்த நபர், மேகன் மாமிசம் சாப்பிடாதவரோ அல்லது மாமிசத்தை வெறுப்பவரோ இல்லை என்றாலும், என்னவோ தெரியவில்லை, அவரால் காரணமின்றி விலங்குகளை துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்.
இளவரசர் ஹரி மேகனிடம், பறவைகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம் என்று விளக்கியதை மேகன் ஏற்றுக் கொண்டாலும், அவரால் அவருக்கு பறவைகள் கொல்லப்படுவதைப் பார்ப்பதற்கு இஷ்டமில்லை.
ஆனால் கேட் வேட்டைக்கு போவதை மேகன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம், அதேபோல் அதைக்குறித்து கேட்டுக்கும் கவலையில்லை என்றே தோன்றுகிறது.