புத்தாண்டு விழிப்புணர்வு எச்சரிக்கை குறித்து பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்த அருள் இரத்தினம் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். கொண்டாட்டம் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்டு வரும் சூழ்ச்சிகள் குறித்து பல உண்மைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
எதிர்க்கலகம் என்கிற பெயரில், இதர சமுதாயங்களை பழிவாங்க வேண்டும் என்கிற பகை நோக்கில், பதின்வயது சிறுமிகளை குறிவைத்து, ‘பள்ளி வயதிலேயே காதல்’, என்கிற நஞ்சை திணித்து, திட்டமிட்டு மனமயக்கி சீரழிப்பதை ஒரு கும்பல் தொழில்மயமாக செய்து வருவதை பலரும் அறிவார்கள்!
அத்தகைய தொழில்முறை நாடகக் காதல் கும்பல் புத்தாண்டு தினத்தில் சிறுமிகளை சந்திக்க வேண்டும் என்கிற வலையை விரித்து, அவர்களை சீரழிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
எனவே, 13 வயது முதல் 21 வயது வரையிலான சிறுமிகள், இளம் வயதினர் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால், டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை அவர்கள் உங்களது கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் தனியாகவோ, ஆண், பெண் நண்பர்களுடனோ வெளியில் செல்ல அனுமதிக்காதீர்.
(பதின்வயதினர் தனி உரிமை பெற்றவர்கள் அல்ல. அவர்களுக்கு எது நலன் தருமோ, அதுமட்டும் தான் அவர்களின் உரிமை! Article 3 of the UN Convention on the Rights of the Child – “The best interests of the child as a primary consideration in all actions concerning children, whether undertaken by public or private social welfare institutions, courts of law, administrative authorities or legislative bodies.”). எனவே, இது புத்தாண்டு எச்சரிக்கை! சிறுமிகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
“எதிர்க்கலகம் என்றால் என்ன?”
ஒரு சமுதாயத்தை பிரதிநிதத்துவப் படுத்துவதாக கூறிக்கொள்ளும், ஆனால், அந்த சமுதாயத்தின் நலனில் சிறிதளவும் அக்கறையில்லாத ஒரு வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் “எதிர்க்கலகம்” என்கிற சித்தாந்தத்தை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது, பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக, மனோவியல் ரீதியாக திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது இந்த வன்முறை கும்பலின் ‘எதிர்க்கலக’ முன்னெடுப்பு ஆகும்.
‘ஒருகாலத்தில் உங்களது முன்னோர்களால் நாங்கள் ஒடுக்கப்பட்டிருந்தோம். எனவே, அதற்கு பதிலடியாக இப்போது நாங்கள் உங்களை தாக்குகிறோம். இதுதான் நீதி, இதுதான் நியாயம். எங்களது தாக்குதலை நீங்கள் மனமுவந்து ஏற்க வேண்டும்.
உங்களது உடைமைகள், உரிமைகள், பெண்கள் என எல்லாவற்றையும் எங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்பது இவர்கள் வைக்கும் வரலாற்று ரீதியான எதிர்க்கலக நியாயம் ஆகும்.
இந்த ‘எதிர்க்கலகத்தில் பெண்கள் ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றனர். தமிழர் பண்பாட்டில் பெண்களுக்கு முதன்மையான இடமிருப்பதால், பெண்களையே இவர்கள் முதன்மையான இலக்காக வைக்கின்றனர். இந்த எதிர்க்கலகம் முறியடிக்கப்பட வேண்டும்.
எதிர்க்கலகம் என்கிற பெயரில் சிறுமிகளின் வாழ்வை சீரழிப்பது ஒரு சமுதாயம் அல்ல. அது ஒரு சிறிய வன்முறை கும்பல் மட்டுமே. எனவே, இவர்களின் நாடகக் காதல் வன்முறையை எந்தவொரு சமுதாயத்துடனும் அடையாளப்படுத்தி பேசாதீர்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.