ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து 75 நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
இதனிடையே, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.17 கோடி என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான். சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.