காதல் ஜோடி காவல் ஆணையாளரிடம் தஞ்சம்!

கோவை மாநகர துணை காவல் ஆணையாளரிடம் ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கண்ணன். இவர் கரும்புகடை பகுதியை சேர்ந்த சோபியா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இளங்கண்ணன் – சோபியா தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலாஜிசரவணனிடம் மனு அளித்தனர்.

மேலும் சோபியா குடும்பத்தினரிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.