கடந்த 2016-ஆம் ஆண்டு சந்தானம் – அஞ்சால் சிங் நடித்து வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை ராம்பாலா இயக்கினார்.
இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.
முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். தில்லுக்கு துட்டு-2 படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக, மலையாள நடிகை ஷிர்தா சிவதாஸ் நடித்து வருகிறார்.
இந்த படம் ஜாலியாகவும் அதே நேரத்தில் காமெடி கலந்த திகில் திரைப்படமாக இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தில்லுக்கு துட்டு-2 படத்தின் முதல் பார்வை ( First Look) வெளியானது. அதை தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், தில்லுக்கு துட்டு 2 படம் இம்மாதம் வெளியாகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.
Dhilluku Dhuddu 2 Today’s News paper Ad #DhillikkuDhuttu2 ?? @ShabirMusic @santhanam_army @santhanamfrance @BloodsSanthanam @SanthanamMsiaFc @Teamsanthanam1 @KollamFans @RIAZtheboss @proyuvraaj @handmade_film ? pic.twitter.com/HR8q1ymQdF
— Santhanam Fans 24×7 (@santhanam24_7) January 1, 2019