சுவிட்சர்லாந்தின் Aegerten பகுதியில் இருந்து மாயமான சிறுவன் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த 13 வயது சிறுவனை கடைசியாக கடந்த ஞாயிறு அன்று பார்த்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்,
பொலிசார் தீவிரமான தேடுதலில் களமிறங்கியிருந்தனர்.
இதனிடையே வியாழனன்று குறித்த சிறுவனின் புகைப்படத்தை முக்கிய ஊடகங்களில் வெளியிட்டு உதவி கோரியிருந்தனர்.
இந்த நிலையில் மாயமான சிறுவன் ஆண்ட்ரி தொடர்பில் முக்கிய தகவலை அவரது தாயார் வெளியிட்டுள்ளார்.
வெள்ளியன்று அவரை தொடர்புகொண்ட பொலிசார் மாயமான ஆண்ட்ரி உயிருடன் இருப்பதாகவும் தற்போது ஜேர்மனியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவன் மாயமான காரணம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், ஆனால் விசாரணை மேற்கொண்ட பின்னரே அது தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.