இன்றைய ராசிபலன் (02/01/2019)

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம்கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு முதுகு, மூட்டு  வலி  வந்து நீங்கும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத உதவிகிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்து வந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதைதெரியும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்றுசெய்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

  • தனுசு

    தனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்:

    எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம்செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்துவந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள்  உடனே முடியும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.