நடிகர் விஷாலுக்கு திடீர் திருமணம்! அதிர்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு?

நடிகர் விஷால் திடீரென திருமணம் செய்யவுள்ளதாக வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஷால் தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, “நடிகர் சங்கத்தின் கட்டடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.

இடையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து பின்னர் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறி வந்தார். நடிகை வரலட்சுமியுடன் காதல் என்றும் அவரைச் சுற்றி கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.


அதற்கு பதில் அளிக்கும் விதமாக வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “அவ்வப்போது எனது திருமணம் குறித்து வதந்திகள் கிளம்புவது போலவே தற்போது வருட இறுதியில் மீண்டும் எனது திருமணம் குறித்து வதந்தி கிளம்பியுள்ளது.

நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்க போவதாகவும் பரவி வரும் அந்த தகவல் வதந்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. நான் எனது வேலையில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்” என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இதேவேளை, நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் திருமணம் நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் எடுத்த இந்த அதிரடி முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.