கிறிஸ்துமஸ் லாட்டரியில் அடித்த $10 மில்லியன் டொலர் பரிசு!

அமெரிக்காவை சேர்ந்த 73 வயது பாட்டி கிறிஸ்துமஸ் லாட்டரியில் $10 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 73 வயதான டோரதி மார்ட்டின், வடக்கு கரோவர் பகுதியில் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு கடையில் கிறிஸ்துமஸ் லாட்டரியினை வாங்கியுள்ளார்.

அதனை சுரண்டி பார்த்துவிட்டு, கீழிருந்து மேலாக எண்களை சரிபார்த்துள்ளார். ஆனால் எதுவும் ஒத்துப்போகாததால் மனமுடைந்து மேலேஎண்களை சரி பார்த்துள்ளார்.

மேலே தன்னுடைய லாட்டரின் எண்கள் ஒத்துப்போவதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், தனக்கு உண்மையிலே $10 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளதா, என்பதை நம்ப முடியாமல் கடைக்குள் உறுதிப்படுத்த சென்றுள்ளார்.

அங்கு பெண் ஊழியரிடம் லாட்டரியை கொடுத்துவிட்டு, இது மட்டும் உண்மையாக இருந்தால், நீங்கள் உடனடியாக ஊழியர்களுக்கு அழைப்பு விடுங்கள். எனக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

அதன்பிறகு அவர் தான் பரிசு வென்றது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து பேசிய டோரதி, நான் இந்த பணத்தில் முதலில் ஒரு புதிய வீடு காட்டுவேன். என்னுடைய பேரக்குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொடுப்பேன் என கூறியுள்ளார்.