கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில், கர்ப்பிணி மெர்க்கலின் உத்தரவை ஏற்று இளவரசர் ஹரி முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கர்ப்பம் என்பதே அனைவருக்கும் ஒரு அழகான, ஆச்சர்யமான விடயம். அதுவரை மனைவியின் வார்த்தைகளை தட்டிய கணவன்கள் கூட, கர்பமடைந்ததும் மனைவிக்கு தேவையான அனைத்தையும் நிறைவிவேற்றுவார்கள்.
மனைவியை முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், விழுந்து விழுந்து கவனிப்பார்கள். இது சாதாரண ஒரு குடும்பமாக இருந்தாலும், அரச குடும்பமாக இருந்தாலும் ஒன்று தான்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான், பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் தம்பதியினர் இடையே நடந்துள்ளது.
இதுகுறித்து அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, இளவரசர் ஹரி இளம்வயதில், அதிக உணவு எடுத்துக்கொள்வார். மது போதைக்கு அடியாகவே இருந்தார் என கூறலாம்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், ஹரியின் நடத்தையில் அதிக மாற்றம் தெரிந்தது. மின்னும் கண்களுடன் உற்சாகமாகவே அவர் சுறுசுறுப்பாக இருந்தார்.
எப்பொழுதும் மது குடிக்கும் ஹரி, தேநீர், காபி குடிக்க கூட மறுத்து விட்டார். கர்ப்பிணி மெர்க்கல் தன்னுடைய காதல் கணவனுக்கு விடுத்த அன்பான உத்தரவால் தான் இது சாத்தியமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஹரி தற்போதெல்லாம் தினம்தோறும் யோகா செய்வதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.