கர்நாடக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கணவரின் முன்னிலையிலே மனைவிக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக நகரங்களின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தில் புகுந்த சில ஆண்கள் அங்கு நின்று கொண்டிருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அந்த வரிசையில் கணவரின் முன்னிலையிலே ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக நடந்துள்ளனர். இதனை பார்த்த கணவன் ஆத்திரத்தில் தட்டி கேட்கும்போது, அந்த நபர்கள் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து கணவரும், மனைவியும் அருகாமையில் உள்ள அசோக் நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் இதில் சம்மந்தப்பட்ட மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.