சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவில் நுழைய மீன்பிடி படகுகளை திருடிய 14 பேரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் Boulogne பகுதியில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் மீன்பிடி படகினை திருடிக்கொண்டு கிளம்பிய 14 பேரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அனைவருமே ஈராக்கில் இருந்து வந்தவர்கள் என்பதும், பிரித்தானியாவில் கடல்வழியே நுழைவதற்காக தான் படகை கைப்பற்றியிருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தாய் மற்றும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக டிசம்பர் 23ம் தேதி இதே துறைமுகத்தில் இருந்து படகுகளை திருடிக்கொண்டு தப்ப முயன்ற 16 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.