வம்பிழுத்த அவுஸ்திரேலிய கேப்டனின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ரிஷப் பண்ட்…

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அவுஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இடையே நடைபெற்ற, கருத்து மோதல்களின் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாக பரவியது.

அப்போது இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட்பேட்டிங் செய்யும் போது, “ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து உன்ன தூக்கிட்டு தோனிய கொண்டு வந்துட்டாங்க.

பரவாயில்லை உன்ன வேணும்னா பிக்பாஸ் (உள்ளூர் போட்டி) போட்டியில் சேர்த்து விடவா?

போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ, நானும் என் மனைவியும் படத்துக்கு போயிட்டு வருகிறோம்.” என அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கலாய்த்தார்.

இதற்கு பழிவாங்கும் விதமாக டிம் பெய்ன் பேட்டிங் செய்யும்போது பேசிய ரிஷப் பண்ட், “நமக்கென்று ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார். ஜட்டு நீ தற்காலிக கேப்டன் என்ற பெயரை இதுவரைக்கும் கேட்டுருக்கியா? உனக்கு அவரை அவுட்டாக்க எதுவும் செய்யம் வேண்டாம்” என பேசியிருந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து ரிஷப் பண்ட்-க்கு 15% அபராதம் விதித்தது ஐசிசி.

இந்த நிலையில் டிம் பெய்ன் மனைவி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷப் பண்ட் மற்றும் தனது குழந்தைகளுடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது சமூக வளைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.