புது வருடத்தில் வீடொன்றில் இடம்பெற்ற மர்மம்!

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவர் சடலமாக மீட்பு.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவரின் சடலமொன்று மாத்தறை கம்புருபிட்டி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞரின் வயது 23 என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞர் அரச மரக்கூட்டுத்தாபனத்தில் சாரதி உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் , நேற்று விருந்தொன்றிற்கான சென்று மீண்டும் தான் தங்கியிருந்த வீட்டிருந்து வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் , இளைஞர் நேற்று காலை குறித்த அறையின் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் உறங்கிய கட்டில் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் , பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மாவட்ட மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.