வவுனியாவில் பதற்றம்! நூற்றுக்கணக்கான பொலிசார் குவிப்பு!

வவுனியா புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனந்தெரியாதோரால் புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள புகையிரத கடவைக்கு அருகாமையிலேயே இவ் ஆயுதங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் சுமார் நூறிற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு மற்றும் தேடுதலுக்கு அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.