புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்டித்த தந்தையை கொலை செய்த மகன்.!!

சென்னையில் உள்ள முகப்பேர் மேற்கு பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன். இவரது மகனின் பெயர் நவீன் குமார் (வயது 19). புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக நவீன்குமார் தனது நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிட்டிருந்தார்.

இரவு நேரத்தில் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்றும் நவீன் குமாரின் தந்தையான வெங்கடேஷ் தனது மகனை எச்சரித்துள்ளார். இதனை கேட்காத நவீன் குமார் வெளியே சென்று விட்டு இரவு சுமார் 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு நவீன் குமார் வந்ததும் நவீனின் தாயார் கண்ணகி எதற்க்காக இவ்வுளவு நேரம் கழித்து வருகிறாய் என்று கேட்கவே., இதனை கேட்ட வெங்கடேசன் தனது மகனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியுள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் தந்தையை வெங்கடேசன் பலமாக தள்ளியுள்ளார். இதனால் நிலைதடுமாறி வெங்கடேசன் இரும்பு கதவில் விழுந்ததால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ந்த அவர்கள் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே., வெங்கடேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வெங்கடேசனின் சொந்த ஊரான ஆரணிக்கு அழைத்து சென்று இறுதி காரியங்களை மேற்கொள்ளவதற்கு தயாராகியுள்ளனர். அதற்கான இறுதி சடங்குகளை அவர்களின் இல்லத்தில் வைத்து நடத்தியுள்ளனர்.

ஆரணிக்கு செல்வதற்காக அவசர ஊர்திக்கும் தகவல் வழங்கியுள்ளனர்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அவசர ஊர்தியின் ஓட்டுநர் வெங்கடேசனின் இறப்பு சான்றிதழை கேட்டுள்ளார். இதனை கேட்டு உறவினர்கள் தவறு செய்தார் போல விழிபிதுங்கியதால்., சந்தேகமடைந்த ஓட்டுநர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் வழங்கினர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறியவைகளை கூறியவுடன்., நவீன் குமாரை கைது செய்த காவல் துறையினர்., நவீன் குமாரின் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.