யாழ் ஆனைக் கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார்.
ஆனைக்கோட்டை ஆறுகால் மடம் பிரதேசத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் யாழ் திருநெல்வேலி சந்தையில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், ஏனைய விபரங்களை இதுவரை பெற்றுக் கொள்ள முடியவில்லை.