தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன். இவருடைய மகன் மாரிமுத்து . இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக விமலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விமாலாவிற்கு அதேபகுதியை சேர்ந்த லேத் பட்டறையில் பணிபுரியும் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உருவானது. தனது கணவன் மாரிமுத்து ஆட்டோ ஓட்ட சென்றதும், கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த மாரிமுத்து, வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு புது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் மனைவி மட்டும் திடீரென மாயமாகியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாரிமுத்து சந்தேகத்தில் பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமலா கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதனை பார்த்து ஆத்திரமடைந்த மாரிமுத்து இரும்புக்கம்பியை கொண்டு அடித்து கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.