புயலின் கோர தாண்டவம்.! 75 பேர் பரிதாப பலி.!!

தென்கிழக்கு ஆசிய நாட்டில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டை வருடத்திற்கு சுமார் 20 புயல்கள் தாக்கி தங்களின் கோர தாண்டவத்தை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக பெய்யக்கூடிய மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

அந்த வகையில்., பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் மத்திய பகுதியில் உள்ள பிகோல் மற்றும் விசயாஸ் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து வருகிறது.

இரண்டு பிராந்தியங்களில் இருக்கும் 300 க்கும் மேற்பட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நிலையில்., நீர் நிலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் கர்ணாம்க ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

பல இடங்களில் வெள்ளம் புகுந்து மக்களின் வீடுகளை சூழ்ந்ததால் இல்லங்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். மேலும்., சாலைகளில் வெள்ள நீரானது சூழ்ந்து முக்கிய போக்குவரத்து வழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பல நகரங்களில் துண்டிக்கப்பட்ட மின்சார சேவையின் காரணமாக மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும்., மழை மற்றும் வெள்ளத்தால் தற்போது வரை 75 பேர் பரிதாபமாக பலியானதாகவும்., 19 பேர் மயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., சம்பவ இடங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.