சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பலர் முன்னிலையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாய் மற்றும் உடன் பிறந்த சகோதரியை மகன் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரி காயரம்பேடு திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர் முத்தம்மாள் (77) இவருக்கு தேவராஜ் என்ற மகனும் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
தேவராஜ் (53) வாட்மேன் வேலை பார்த்து வந்துள்ளார் தேவராஜ். தனது தாய் முத்தம்மாளை தேவராஜ் சரியாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் தாய் சொத்தை மகன் மற்றும் மகள்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுக்க முடிவு செய்து சமீபத்தில் சொத்தை அவ்வாறே பிரித்து கொடுத்ததாக கூறப்படுகின்றது.
மகன் தேவராஜ்
இதில் தேவராஜிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தாயின் மீது சொத்து பிரச்சனையில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார் தேவராஜ்.
சம்பவத்தன்று வழக்கு விசாரனைக்கு முத்தம்மாள் மற்றும் அவரது மகள் விஜயலட்சுமி ஆகியோர் ஆஜராகி கூன்றத்தூர் அருகே கோவுர் என்ற இடத்தில் உள்ள தனது இன்னோரு மகள் வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளனர்.
தேவராஜ், கூடுவாஞ்சேரியிலேயே வைத்து தாய் முத்தமாள் மற்றும் சகோதரி விஜயலட்சுியை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார்.
அங்கு பேருந்தில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் அங்கு திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
மகள் வீட்டிற்கு செல்ல தாம்பரம் வந்த தாய் மற்றும் சகோதரி, 166 எண் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
மகன் தேவராஜ்
திடீர் என பேருந்தில் புகுந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் மற்றும் சகோதரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இருவரும் பேருந்தில் சரிந்தனர். இருவரும் இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பிடி ஓடியுள்ளார் தேவராஜ். இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
தாம்பரம் போலிசார் அவரை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர். தாய் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சகோதரி பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாய் மற்றும் சகோதரி கொண்டு வந்த பை ரத்த கறையுடன் கிடந்தது. அதில் இருந்து ஆப்பில் பிஸ்கட் பாக்கட்டுகள் சிதறிக் கிடந்தது.
சொத்துக்காக பெற்ற தாய் மற்றும் சகோதரியை பலர் முன்னிலையில் மகன் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.