தந்தையின் மரணவீட்டிற்கு செல்லாது அணிக்காக விளையாடிய ஆப்கான் வீரர்!

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சிறப்பான பந்துவீச்சின் காரணமாக உலக அளவில் பிரபலமானார்.

ரஷித் கான் மிகக் குறைந்த வயதில் விரைவாக 100 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 118 விக்கெட்டுகளையும், 35 டி20 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஷ் லீக் தொடரில் விளையாடி வரும் ரஷித் கான், கடந்த சில நாட்களுக்கு முன் தந்தை இறந்துவிட்ட காரணத்தால் , 2 போட்டிகளில் அவர் பங்கேற்காமல் சென்று மீண்டும் விளையாடினார். இதில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை ரஷித் கான் கைப்பற்றினார்.

ரஷித் கானின் தந்தை திடீரென காலமானதையடுத்து வேதனையுடன் அவர் ட்விட்ர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்துவிட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை மறைந்துவிட்டார்.

இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என பதிவிட்டுள்ளார்.