பசில் மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழிநடத்தப்படுவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட கட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.