சிகிச்சையில் இருந்த தந்தைக்கு உதவியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி நடந்த ஒரு விபத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கு, பலத்த காயம் ஏற்பட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உதவிக்காக அவரது மகள் ஐந்தாவது படிக்கும் மாணவி, மருத்துவமனையில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அந்த மாணவி மருத்துவமனை எதிரே உள்ள பேக்கரியில், டீ வாங்கச் செல்வது வழக்கம். அப்போது அதே பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த பெரியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் சரவணன் (20), சிறுமி மீது தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளான். இதையடுத்து, சிறுமிக்கு ஸ்வீட்டை வாங்கிக் கொடுத்த சரவணன் மருத்துவமனை பின்னால் இருந்த, பாழடைந்த கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் சிறுமி அலறிய நிலையில், சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதனைத் தொடர்ந்து தகவலறிந்த மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தப்பி ஓடிய சரவணனை பிடித்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.