சென்னையில் போதை பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் மற்றும் மெரினா உள்ளிட்ட இடங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கஞ்சா வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. இது போன்ற போதை வஸ்துக்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் அதிகமாக சிக்கி கொள்கிறார்கள்.
கஞ்சா விற்பனை செய்பவர்கள், பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் தான் முதலில் டார்கெட் செய்கிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தற்போது சென்னையில் சாதாரணமாக கிடைக்கிறது. இந்த விவகாரத்தில் காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்களை குறி வைத்தே கஞ்சா விற்படுகிறது. இறுதியில் மாணவர்களின் வாழ்க்கையை வீணாகிறது என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை காக்க, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என “பழைய வண்ணாரப்பேட்டை” திரைப்படத்தின் இயக்குனர் மோகன் அரசுக்கும், காவல்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், கஞ்சா கலாச்சாரம் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது. 12 வயதில் கஞ்சா அடிக்க, அடுத்த தலைமுறை இளைஞர்கள் பழகி கொள்கிறார்கள். எனவே, காவல் துறையினர் கஞ்சாவை விற்பவர்களை கைது செய்து, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
கஞ்சா கலாச்சாரம் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது.. 12 வயதில் கஞ்சா அடிக்க அடுத்த தலைமுறை இளைஞர்கள் பழகி கொள்கிறார்கள்.. காவல் துறையினர் கஞ்சாவை விற்பவர்களை கைது செய்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்…
— Mohan G ? (@mohandreamer) January 2, 2019