தமிழகத்தில் உறைபனி! வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் வகிழக்கு பருவமழை முடிவடைத்துள்ளதாகவும், தமிழகத்தின் உல் மாவட்டங்களில் மூடுபனி பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மலை பாங்கான மாவட்டங்களில் உறைபனி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் மழை, புயல், வெயில், பனி என்று தொடர்ந்து வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக கடுமையான பனி பொழிவு இருந்து வருகிறது. மலை பகுதிகளில் மிக கடுமையான பனி பொழிவு இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசு அளித்துள்ள பேட்டியில், ”தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைவதாக” தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மூடுபனியும், நீலகிரி உள்ளிட்ட மலை பாங்கான பகுதிகளில் உறைபனி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 டிகிரி செல்ஸியஸ் நிலவவும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசு தெரிவித்துள்ளார்.