இரவு விமானத்தில் தனி ஆளாக பயணித்த இளம் பெண்ணுக்கு ஊழியர்களால் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் Davao நகரிலிருந்து தலைநகர் Manilaவுக்கு PR 2820 ரக பயணிகள் விமானம் இரவு பயணமாக கிளம்பியது.
விமானத்தில் லூயிசா எரிப்ஸி என்ற இளம்பெண் மட்டுமே தனியாக பயணிக்க தயாரானார். காரணம் வேறு யாருமே வரவில்லை.
இதையடுத்து லூயிசா, விமான பணியாளர்கள் மற்றும் விமானியுடன் விமானம் கிளம்பியது.
தனியாளாக பயணம் செய்ததால் லூயிசா உற்சாகமாக காணப்பட்டார், அவருக்கு உணவுகள், பானங்கள் என சிறப்பான உபச்சாரம் செய்யப்பட்டது.
வாழ்க்கையில் ஒரு முறை மட்டும் கிடைக்கும் இது போன்ற அரிதான பயணத்தை மகிழ்ச்சியுடன் கழித்தார் லூயிசா.
பின்னர் விமானத்தில் இருந்த ஊழியர்கள் லூயிசாவுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
விமான நிலையத்துக்கு விமானம் வந்தவுடன் லூயிசாவின் உடைமைகள் மட்டும் தனியாக பரிசோதனை செய்யப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.