தமிழகத்தின் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழ் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் பூஜாதீன் என்பவர் விபத்தில் காயமடைந்த காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு துணையாக ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவரது மகள் மருத்துவமனையில் இருந்துள்ளார்.
தனது தந்தைக்கு தேவையான உணவுப்பொருட்களை மருத்துவமனை எதிரில் உள்ள கடையில் வாங்கி வந்துள்ள நிலையில் அந்தக் கடையில் வேலை செய்துவந்த பெரியபட்டினம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பரின் மகன் சரவணன்(20) மருத்துவமனையில் இருந்த சிறுமியிடம் திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து வந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
பாலியல் தொந்தரவால் சிறுமி கூச்சலிட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை சிறையில் அடைத்தனர்.