புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு அரசு அதிரடி சலுகை!!

கடந்த மாதம் வீசிய கஜா புயலால் நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் என அனைத்தும் அடியோடு சாய்ந்தன. வீடுகள் அனைத்தும் நாசமாகின. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மீண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வங்கி கடனை செலுத்த பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய கடன்களின் வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்த ஒரு வருடம் முதல் 4 வருடம் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை பெறுவதற்கு பயிர் சேதம் 33 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். இச்சலுகையை பெற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அவர்கள் கடன் பெற்றுள்ள வங்கிக்கு சென்று வரும் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.