நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட்! அறிவிக்கப்பட்ட இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான நான்காவது போட்டிக்கான அணியில் ரஹானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூவர் கூட்டணியில் இருந்த இஷாந்த் சர்மா இந்த அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னி போட்டிக்கு அஸ்வின் உடற்தகுதி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 13 பேர் கொண்ட பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

நாளை போட்டி தொடங்கும் போது, அஸ்வின் உடற்தொகுதியை கவனத்தில் கொண்டு களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

எப்போதும் போட்டி நடக்கும் முதல்நாளே ஆஸ்திரேலிய அணி தங்களுடைய 11 பேர் கொண்ட அணியை அறிவிப்பது வழக்கம். ஆனால் இந்திய அணி போட்டி தொடங்கும் முன்னரே அறிவிப்பார்கள். ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி கடுமையான குழப்பத்தில் உளள்ளதால் அணியை அறிவிக்கவில்லை.