கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகளும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் யாரும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில்18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி அந்த வீடியோவும் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் சபரிமலை சென்ற இளம்பெண் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண் இறந்தநிலையில் அவரை தூக்கிச்செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதனை ஐயப்பன் கொடுத்த தண்டனையாகவே கருதுகிறோம் என ஐயப்ப பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த மரணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.