சினிமாவில் வருவது போலவே ‘டேட்டிங் சென்றவுடன் தவறாக என்ன வேண்டாம் என்று சொல்லவில்லை. உண்மையில் அதுதான் உண்மை. காதலன் காதலியை கட்டிப்பிடிக்கலாம்… முத்தம் கொடுக்கலாம்’ என சந்தேகத்துடன் நினைக்கக்கூடாது. அதும் நடக்கலாம்.
டேட்டிங்கில் மேல் சொன்னது போல் ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் அது டேட்டிங் இல்லை. பின்வருபவற்றை பின் பற்றுங்கள்.
* உங்கள் காதலியுடன் யதார்த்தமாக மட்டுமே பழக வேண்டும்.
* நான் இப்படி அப்படி’ என வீண் ஜம்பம் பேசக்கூடாது.
* குறிப்பாக பொய் சொல்லக்கூடாது.
* அடுத்த முறை நீங்கள் வெளியே கூப்பிட்டால் இவரோடு போகலாம் என்னும் நம்பிக்கையை உங்கள் காதலிக்கு ஏற்படுத்த வேண்டும்.
* காதலி பேசுவதையும் முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டும்.
* உங்களுக்கு பிடித்த விஷயத்தை மட்டுமே பேசி காதலியை சலிப்படைய செய்யக்கூடாது.
* துணைக்குப் பிடித்த விஷயங்களை தெரிந்து கொண்டு அதை பேசி உற்சாகம் அடையச் செய்ய வேண்டும்.
* டேட்டிங் போகும் நேரத்தில் ஃபேஸ்புக் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் பிசியாக இருப்பது போன்ற விஷயங்களைச் செய்யக்கூடாது.
* காதலிக்கிறவர் மேல் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.
* பழக ஆரம்பித்த உடனே ‘ஐ லவ் யூ’ சொல்லக்கூடாது.
* அப்படி எடுத்தவுடன் அணுகுவது ‘இவர் அந்த விஷியத்திற்கு தான் நம்மிடம் பழகுகிறாரோ’ என்ற பயத்தை ஏற்படுத்தும்.
* சினிமாவில் மட்டும்தான் எடுத்த எடுப்பிலேயே காதலை சொல்ல முடியும்.
* நிஜ வாழ்வில் நன்கு பழகிய பின் மட்டும்தான் காதலை சொல்வதே சரியாக இருக்கும்.
* பல முறை டேட்டிங் சென்றபின்தான் ஒருவருக்கொருவர் புரிந்து, ஒத்திசைவான மனநிலை ஏற்படும். அதுவரை பொறுமையாக இருப்பது அவசியம்.
* ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது விலையுயர்ந்த பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள்.
* ஒவ்வொரு சந்திப்பின் போதும் அப்படியான பொருட்களை கொடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.
* ரோஜாப்பூ மாதிரி எளிய பரிசுகளை அன்புடன் கொடுத்து மகிழலாம்.
* அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு சென்றால் சரியாக பேச முடியாது.
* அதே நேரத்தில் கூட்டம் இல்லாத, பாதுகாப்பு இல்லாதா இடத்துக்கு காதலியை கூட்டிச் செல்வதும் பாதுகாப்பானது கிடையாது.
* மிதமான கூட்டம் உள்ள காபி ஷாப், டிரைவ் இன் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.
* டேட்டிங்கில் காதலி கட்டிப்பிடிப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ அன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கூடுதல் சலுகையாக எடுத்துக் கொண்டு எந்தத் தவறான காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதுதான் இருவரிடையே உறவை வளர்க்கும்.