தொப்பையை குறைக்க எளிய வழிமுறை!

தற்போதைய வாழ்க்கைமுறையில் ஆன், பெண் இருவருக்கும் தொப்பை ஒரு வியாதிபோல் மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கங்கள். உடற்பயிற்சியின்மையும் தொப்பை உருவாகுவதற்கு காரணமாய் அமைகிறது.

தொப்பையை குறைக்க வீட்டிலேயே எளிதான பழக்கங்களை கடைபிடித்தால். இரண்டு மாதங்களில் தொப்பை காணாமல் போய்விடும்.


க்ரீன் டீ:
க்ரீன் டீ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து விரைவாக கொழுப்பை கரைக்கிறது. மேலும் டயாபெட்டீஸ் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. க்ரீன் டீயில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது சிறந்தது.

எலுமிச்சை:
காலையில் எழுந்தவுடன் சூடான நீரில் எலுமிச்சை சாறை சேர்த்து பருகிவந்தால் விரைவில் தொப்பை குறைந்துவிடும்.

புதினா:
புதினா நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. எனவே புதினா தேநீர் அருந்தி வந்தால் கொழுப்பு கரைந்து எளிதில் தொப்பை குறைந்துவிடும்.


துளசி:

துளிசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான ஹார்மோன் அளவை குறைக்கிறது. இதனால் துளிசி இலைகளை சாப்பிடும் போது கொழுப்பு எளிதாக கரைந்துவிடும்.


கற்றாழை:
தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. சோற்று கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து உடம்பில் உள்ள கொழுப்புகளை விரைவில் வெளியேற்றும்.