கொழும்பில் இருந்து யாழ் சென்ற வாகனம் விபத்து – ஒருவர் பலி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் இருந்து சென்ற ஹையேஸ் ரக வான் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பஸ் சாரதி சம்பவ இடத்தில் பலியானார் என தெரியவருகின்றது.