மஹிந்தவின் வெற்றி உறுதி! சந்திரிக்கா எடுத்த அதிரடி தீர்மானம்!

சமகால அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

21 சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் எனவும், அமைச்சு பதவி வழங்கவில்லை என்றாலும் அரசாங்கம் நிலையற்ற தன்மைக்குள்ளாவதனை தடுப்பதற்காக அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இருப்பவர்களுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய சிக்கல் அல்ல. எனினும் சுதந்திர கட்சியின் 21 உறுப்பினர்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்றை விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் சந்திரிக்கா கூறியுள்ளார்.

குறைந்த பட்சம் 20ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தை சமர்ப்பிப்பதற்கேனும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலுக்காக மேலும் சில சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இணையம் ஊடாக பங்கேற்றுள்ளனர்.

சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.