சிவபெருமானை வழிபட உகந்ததா நாள் பிரதோஷம் ஆகும். பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் முதல் பிரதோஷம் இன்று. இன்று விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பிரதோஷ காலம் எது?
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும்.
சனி பிரதோஷம் என்றால் என்ன?
சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
மஹா பிரதோஷம் :
சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது. அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி திதியில் வரும் பிரதோஷ நாளே மஹா பிரதோஷம் ஆகும்.
நித்திய பிரதோஷம் :
அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை நித்திய பிரதோஷம்.