அமெரிக்காவில் அட்லாண்டாவின், புறநகர் பகுதியான லாரன்ஸாஸ்வில்லே பகுதியை சேர்ந்த டெவின் ஹோட்ஜ் (15) என்பவரை பார்க்க, இரண்டு நாட்களுக்கு முன்பு, 3 நண்பர்கள் அவரது வீட்டிற்கு வருகை புரிந்தனர்.
தனது வீட்டிற்கு வந்த தனது நண்பர்களிடம் டேவின் வீட்டில் உள்ள கைத்துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார். அதனை காட்டி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த டெவின் துப்பாக்கியை கையில் வைத்து அதனை ஆராய்ந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தார்.
அப்போது தவறுதலாக துப்பாக்கியை இயக்கி அழுத்திவிடவே, அவனது அருகில் இருந்து மற்றொரு நண்பரின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டது. மற்ற இரு நண்பர்களும் பயத்தில் அங்கிருந்து ஓடிச்சென்று, காவல்துறைக்கு தகவல் அறிவித்துள்ளனர்.
ஆனால், அனைவரும் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே, டெவினின் நண்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால், போலீசை கண்டு அச்சமடைந்த டெவின் எழுந்து அருகில் உள்ள வீட்டிற்கு ஓடிச்சென்றார் .
எனினும் போலீஸ் பிடித்துவிடும் என பயத்தில் இருந்த டெவின் தானாகவே தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.