சென்னை எக்மோர் நீதீமன்றத்திற்கு கைதிகளை அழைத்து சென்ற காவலர்களை அநாகரிகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஒருவரும், அவருக்கு ஆதரவாக பேசும் வழக்கறிஞரின் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று சென்னை எக்மோர் நீதீமன்றத்திற்கு கைதி வழிக்காவல் சென்ற இடத்தில் முன் பின் தெரியாத ஒரு நபர் கைதிகளின் மேல் கை வைத்து பேசி கொண்டிருந்தார். இதை கவனித்த காவலர் பேசுங்கள் ஆனால் தொட்டு பேசாதீர்கள் என கூறியுள்ளார்.
போலீசார் அவ்வாறு கூறியதால், நான் யார் தெரியுமா.? என அநாகரிக பேச்சுக்களை பேசியுள்ளாா். இதை வீடியாே எடுத்த காவலரை முதலில் போனை வை டா எனவும் செல்போனை உடைத்து விடுவேன் எனவும் கூறியுள்ளாா். மேலும் எனக்கு பெண் தறுவதற்கா என்னை வீடியோ எடுக்கிறாய் எனவும் பேசியுள்ளார்.
மேலும், நீ அந்த வீடியோ எடுத்து யாருக்கு அனுப்புவாய். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது. உங்க டிஜிபியை இப்போதே இங்கு வர வைக்கவா என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
கைதி வழிக்காவலில் கைதிகளிடம் யாரும் பேச அனுமதிக்க கூடாது என்பது விதி. இதை கடைபிடித்த காவலர்களை கொன்று விடுவேன் என மிரட்டுவது சரியா? என காவலரகள் மனமுடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.