சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பலங்களில் ஒன்று தான் திராட்சை.
இதில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் உள்ளடங்கும்.
இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.
அந்த வகையில் திராட்சையை தினமும் 1 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏராளமான பயன்கள் நமக்கு அள்ளித்தருகின்றது. தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.
- தினமும் தொடர்ந்து 1 மாத கால அளவு இந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ளும்.
- திராட்சையில் anthocyanin என்கிற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் கிட்னியில் , சிறுநீர் பாதை தொற்றுகளில் உள்ள கிருமிகளை எதிர்த்து இது போராடும்.
- சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் திராட்சை முதன்மையான பங்கு வகிக்கிறது.
- மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து திராட்சை காக்குமாம். எனவே, தினமும் திராட்சை எடுத்து கொண்டால் இந்த பலனும் கிடைக்கும்.
- திராட்சையை தினமும் தொடர்ந்து 1 மாத காலம் சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கே புரியும் மக்களே. அதிக ஸ்டாமினாவை தந்து மூளையை திறனுடன் செயல்பட வைக்கும்.
- தினமும் தொடர்ந்து திராட்சையை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இதய நோய்களுக்கான வாய்ப்புகள் மிக குறைவாம்.
- திராட்சையை தினமும் சிறிதளவு உங்களின் உணவு பழக்கத்தில் சேர்த்து கொண்டால் சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்கும்.
- திராட்சையில் உள்ள அதிக நார்சத்து செரிமான கோளாறை குணப்படுத்துகிறது. குடலின் செயல்திறனை அதிகரித்து, மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்து கொள்கிறது.
- கருப்பு திராட்சை தொடர்ந்து ஒரு மாதம் இந்த திராட்சையை சாப்பிட்டு வருவதால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும்.
- தொடர்ந்து 1 மாதகாலம் திராட்சை சாப்பிட்டு வந்தால் தசைகள் வலு பெற்று, உடனடி ஸ்டாமினா கிடைக்கும். மேலும், எலும்புகளுக்கும் ஆற்றல் அதிகமாக கிடைக்கும்.
குறிப்பு
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அளவுக்கு அதிகமாக திராட்சை சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் அலர்ஜி, உடல் எடை கூடுதல், செரிமான கோளாறுகள், வாந்தி போன்றவை ஏற்பட கூடும்.