கண்ணீர் விட்டு கதறிய துரைமுருகன்!

தலைவர் கருணாநிதி சவத்தின் மீது கண்ணீர் சிந்திய துர்பாக்கியத்தை பெற்று விட்டேன் என கூறி ட்டப்பேரவையில் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதார்.

சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன், கருணாநிதி, பரிதி இளம்வழுதி, ஏ.கே.போஸ் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அப்போது, இரங்கல் தீர்மானத்தை வாசித்த துணை முதல்வர், 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் கருணாநிதி; கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.

இதை தொடர்ந்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், 2007-ல் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது, என் அறையிலேயே இருந்து கருணாநிதி என்னை பார்த்துக்கொண்டார் என உருக்கமாக பேசினார். மேலும் பேசிய அவர், தலைவர் கருணாநிதியின் சவத்தின் மீது கண்ணீர் சிந்திய துர்பாக்கியத்தை பெற்று விட்டேன் என சட்டப்பேரவையில் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழு தொடங்கினார். அவர் அழுத்ததும், ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கண் கலங்கினர்.

தன் பிள்ளைகளை விட தனக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்து கொண்டவர் கருணாநிதி என்றும், எனக்கு இரண்டாவது உயிரை கொடுத்தவர் கருணாநிதி; என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்தவர் கருணாநிதி என துரைமுருகன் பேசினார்.