வாகனம் புகைக்கசிவு தரநிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதழை எந்நேரமும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என முல்லைத்தீவு போக்குவரத்து பிரிவு பொலிஸார் இன்று அறிவித்தல் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் கடந்த காலங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி அட்டை ஆகியவற்றை மட்டும் பரிசோதித்து வந்த நிலையில் தற்பொழுது வாகன புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழையும் பரிசோதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முல்லைத்தீவில் பெரும்பாலான சாரதிகள் குறிப்பாக மோட்டர் சைக்கிளில் பயணிப்போர் புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழை வாகனத்தில் வைத்திருக்க தவறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், போக்குவரத்து பொலிஸாரின் தீடீர் பரிசோதனையின் போது சாரதிகள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், சாரதிகளுக்கு புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழை வாகனத்துடன் எடுத்துச் செல்லுமாறு போக்குவரத்து பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.