மூவர் மரணத்திற்கு காரணமான இளைஞரின் புகைப்படம் வெளியானது!

பிரித்தானியாவில் முன்னாள் காதலியை பழிவாங்க அவரது குடியிருப்புக்கு நெருப்பு வைத்து, மூவர் மரணத்திற்கு காரணமான இளைஞரின் புகைப்படன் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Kirton பகுதியில் ஜனவரி முதல் திகதி அதிகாலையில் குடியிருப்பு ஒன்றுக்கு நெருப்பு வைத்த நபர் தொடர்பில் தகவலுடன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

குறித்த கொலை முயற்சி சம்பவத்தில் உயிர் தப்பிய பெண் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Kirton பகுதியில் குடியிருக்கும் 27 வயதான ஜே எட்மண்ட்ஸ் என்பவர் தமது நான்கு படுக்கை அறை கொண்ட குடியிருப்பின் சில பகுதியை தனது நண்பர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இவருக்கு மொபைல் விற்பனை பிரதிநிதியான Billy Hicks என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கருத்து வேருபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

சம்பவத்தன்று ஜே தமது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதிகாலையில் கையில் எரிபொருள் நிரப்பிய டப்பாவுடன் குறித்த குடியிருப்புக்குள் புகுந்த பில்லி,

தமக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்க வேண்டாம் என கத்தியவாறே பெட்ரோலை அப்பகுதி முழுவதும் வீசியுள்ளார்.

பின்னர் நெருப்பு வைத்துள்ளார். இதில் 24 வயதான பில்லியும், 27 வயதான பெண் ஒருவரும் 32 வயதான நபர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜேவின் தோழிகள் இருவர் அதிர்ஷ்டசமாக மொட்டைமாடியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளனர். இவர்களே விசாரணை அதிகாரிகளிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியும் இந்த தீ விபத்தில் கொல்லப்பட்டுள்ளதால் மேற்கொண்டு விசாரணையை முன்னெடுக்க பொலிசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் காதல் விவகாரம் தொடர்பிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.