ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில்அபாரமாக வென்றது.
இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் நேற்று சிட்னியில் துவங்கியது. தற்போது நடக்கும் போட்டியில் இந்திய அணி வென்றலோ அல்லது ட்றாவில் முடிந்தாலோ இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் புதிய சாதனையை படைக்கும்.
நான்காவது டெஸ்ட்டின் முதனால் அட்டமான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130, ஹனுமா விகாரி 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியவீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். சிறப்பாக ஆடிய ஹனுமா விகாரி 42 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் 27 ரன்களும், புஜாரா 181 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடிவருகின்றனர். புஜாரா சிட்னி டெஸ்டில் 181 ரன்கள் (332 பந்து) குவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார். இந்த ஆஸ்திரேலிய தொடரில் புஜாரா இதுவரை 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 458 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
மொத்தம் இதற்காக அவர் 1,135 பந்துகளை சந்தித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஆயிரம் பந்துகளுக்கு மேல் சந்தித்த 5–வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்து ஆடிவருகின்றது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி எளிதில் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.