மனவளர்ச்சி குன்றிய பெண்ணின் பரிதாபநிலை…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கருங்கல் அருகே புங்கரையைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு, அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், தக்கலை அருகே வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் திரண்ட நிலையில், அரைகுறை ஆடையுடன் சதீஷ் தப்பிக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது அவரை வளைத்துப் பிடித்த பொதுமக்கள், பலாத்கார முயற்சியின்போது காயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.