சற்று முன் வெளியான அறிவிப்பால் சமந்தன் பேரதிர்ச்சியில்!

எதிர்க்கட்சித் தலைவராக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவே தொடர்வார் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை அவர் சற்றுமுன்னர் கட்சித் தலைவர்களுக்கு அவர் விடுத்துள்ளார்.

அத்துடன் எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர செயற்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் எதிர்க்கட்சித் தலைவர் யாருக்கு என்ற இழுபறி நிலை தொடர்ந்துவந்தது.

நாடாளுமன்ற அங்கீகாரமற்ற கட்சியொன்றின் உறுப்புரிமை கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வகிக்கும் தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூறிவருகிறது.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்தி சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சி சபாநாயகரிடம் உறுதிப்படுத்தற் கடிதத்தினைக் கையளித்திருந்தது.

இதன்பின்னர் நாடாளுமன்றம் கூடியபோதும் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான உரிய தீர்மானங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலை காணப்பட்டது.

தாம் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவரும் நிலையில் இன்றைய தினம் சபாநாயகரின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.