கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 60 குடும்பங்களுக்கு பத்தரமுல்லை சீலரத்ன தேரர் உலர் உணவு பொருட்களை இன்று வழங்கி வைத்துள்ளார்.
இதன் போது அவர் கருத்து தெரிவிக்கும் போது;
இங்கு இவ்வளவு கஷ்டத்தில் மக்கள் இருக்கின்றார்கள். மக்களின் வாக்குகளில் தெரிவான தமிழ் பிரதி நிதிகள் என்ன செய்கின்றார்கள்.வடக்கு, கிழக்கு மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் மற்றும் நல்ல கல்லூரிகளிலும் கல்வி கற்கின்றார்கள்.
தமது வசதிக்கேற்றவாறு பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.